Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த வருஷம் தேர்தல்…! ”விட்டுறாதீங்க, பாயுங்க” OPS, EPS அதிரடி முடிவு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அதிமுக சில முன்னெடுப்புகளை செய்துள்ளது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் தமிழகத்தை புரட்டிப் போட்டது கொரோனா வைரஸ். ஆனால் கொரோனாவுக்கு முன்பே திமுக ஐபேக் நிறுவனத்தோடு கைகோர்த்து தேர்தல் பணியை நடத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கொரோனா குறித்த விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதையும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார களமாக முதலில் மாற்றியது திமுக தான். ”ஒன்றிணைவோம் வா” என்ற முழக்கத்தோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது.

அதிமுக அறிக்கை:

திமுகவின் இந்த திட்டம் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் என்று சொல்லப்பட்டது. இதனால் திமுகவுக்கு சரிக்கு சமமாக அதிமுகவும் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. குறிப்பாக அதிமுகவின் அறிக்கை தேர்தல் களத்துக்கான முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகின்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு அம்சங்கள் சொல்லப் பட்டுள்ளன.

பொறுப்புகள் இரத்து:

ஓன்று மாவட்டத்தில் உள்ள ஊராட்சி கிளைக் கழகச் செயலாளர்கள் பொறுப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இதற்கு உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற சில மோதல்கள் காரணம் என்று தெரியவருகின்றது.உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படுவது போல,  சட்டமன்ற தேர்தலிலும் கைகலப்பு ஏற்பட்டு விடக்கூடாது அதனால் நிர்வாகிகளை சரிசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

5 மண்டலமாக ஐடி பிரிவு:

அதே போல இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சம் என்னவென்றால், சமூக வலைதளங்களை மிகவும் ஆக்டிவாக செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நான்காக பிரிக்கப்பட்டு தனித்தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதில், சென்னை மண்டல ஐடி பிரிவு செயலாளர் – அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் மண்டலத்துக்கு கோவை சத்யன், கோவை மண்டலம் – சிவகங்கை ஜி.இராமச்சந்திரன், மதுரை ஐடி பிரிவு செயலாளராக ராஜசத்யன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு தயார்:

தேர்தல் நெருங்கி வருவதால் சமூக வலைதளங்களில் மிகவும் அதிகளவு இயங்க வேண்டும், பிரச்சாரத்தை வலு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அதிமுகவும் தேர்தலுக்கு தயாராகி உள்ளது என்பதை உணர்த்துவதை அதிமுக தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |