மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சீதாராமம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சென்னையில் கிரீன்வேஸ் பகுதியில் அமைந்துள்ள அவருடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் பாஸ்கர் (57) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று துல்கர் சல்மானின் வீட்டில் இருக்கும்போது ஆன்லைனில் பீட்சா மற்றும் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஸ்கருக்கு திடீரென நள்ளிரவில் மூச்சு திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் வந்துள்ளது. இவரை துல்கர் சல்மான் வீட்டில் பணியாற்றும் ஸ்ரீஜித் என்ற ஊழியர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாஸ்கர் உயிரிழந்து விட்டார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே பாஸ்கர் இறந்ததற்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.