அமெரிக்காவில் வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 46வது அதிபராக ஆட்சியில் அமர்ந்தார். அந்த சமயத்தில் அங்கு கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டார்.
இதற்கிடையில் நாட்டில் அடுத்த அதிபர் தேர்தலானது வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க இருக்கிறது. அது பற்றிய பேச்சுகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இந்நிலையில், இது பற்றி பத்திரிகையாளர்களிடம் ஜோ பைடன் கூறுகையில், 2024 ஆம் வருடத்தில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளேன். எனினும் இது பற்றிய உறுதியான தீர்மானத்தை அடுத்த வருட தொடக்கத்தில் தான் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.