Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறிய நியூசிலாந்து மந்திரி பதவியிறக்கம்….!!

ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் காரில் சுற்றியதால் சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும் வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நியூசிலாந்தின் சுகாதார மந்திரியான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் கடற்கரையில் காரில் உலா வந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மக்கள் சமூக வலைத்தளங்களில் டேவிட் கிளார்க்கை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளாக் தன் தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததோடு பிரதமர் ஜெசிந்தாவிடம் ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் பிரதமர் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்து டேவிட் கிளார்க்கை இணை சுகாதாரத் துறை மந்திரியாக பதவி இறக்கம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் ஜெசிந்தா கூறுகையில் “டேவிட் கிளார்க் செய்த தவறுக்கு அவரை பதவி நீக்கம் செய்திருப்பேன் ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க அவரின் பங்களிப்பு தேவைப்படும் என்பதால் பதவியிறக்கம் செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |