Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்தி தவறானது – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்த நிலையில் அந்த செய்தியில் உண்மை இல்லை என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தவறான செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது.

வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. எனவே அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள், தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவு, அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும், பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர் கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமது பெயரில் தவறான செய்தி வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Categories

Tech |