ஊரடங்கினால் இந்தியாவில் சிக்கிய நியூசிலாந்து வாழ் இந்தியர் 7 மாத குழந்தையுடன் நேற்று சிறப்பு விமானம் மூலம் நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்
ஆந்திர மாநிலம் பாரடி கிராமத்தைச் சேர்ந்த சமந்தா தல்லியர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு நியூசிலாந்தின் வசித்து வருகிறார். பாரடி கிராமத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தந்தையை சந்திப்பதற்காக தனது 7 மாத குழந்தையுடன் சமந்தா தல்லியர் வந்துள்ளார். பின்னர் மார்ச் மாதம் நியூசிலாந்து திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மீண்டும் நியூசிலாந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சிக்கியிருக்கும் நியூசிலாந்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான தொகையை மக்கள் நாடு சென்றவுடன் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து செல்வதற்கு உதவுமாறு பாரடி நகராட்சியை சமந்தா தொடர்பு கொண்டார். அவரது விசா வடோடாராவில் இருக்கும் அத்தையுடன் இணைக்கப்பட்டு இருந்ததால் பாரடியில் இருந்து வடோடாரா செல்ல அனுமதி வழங்க இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர் அனுமதி கிடைத்ததும் நேற்று தனது ஏழு மாத குழந்தையுடன் சமந்தா சிறப்பு விமானம் மூலம் நியூசிலாந்து சென்றடைந்தார்.