Categories
உலக செய்திகள்

நான் அவன் பெயரை உச்சரிக்க மாட்டேன்….. நீங்களும் உச்சரிக்க வேண்டாம் – பிரதமர் ஜெசிந்தா..!!

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக  தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக  பிரதமர் ஜெசிந்தா தலைமையில் சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்திலேயே , அரபு மொழியில் அனைவருக்கும்  வணக்கம் கூறிவிட்டு ஜெசிந்தா பேசத்  துவங்கினார். அப்போது அவர் பேசிய போது பயங்கரவாத தாக்குதல் நடத்தி அந்த கொடூரன்  பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவன்  பெயரை நான் கேட்கக்கூட விரும்பவில்லை.
Image result for New Zealand Prime Minister Jacinda said that he would not pronounce the name.

 

இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு முழு  மரியாதை செலுத்தும் வகையில் எம்பிக்கள் அனைவரும்  பணியாற்றுவார்கள். சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும். அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க விரும்பவில்லை விரும்பவும் மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை நிறுத்தி விடுங்கள், அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்க்கு முன்னதாக நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் பேசிய பிரதமர்: நியூசிலாந்து சட்டப்படி ஒருநபர்  16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் எனவும்  பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |