Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : அதிரடி காட்டிய “டெய்லர்”…. இந்தியாவை வீழ்த்தி… “நியூசிலாந்து அசத்தல் வெற்றி..!!

நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியுது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரர்களான ப்ரித்வி ஷா – மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், இளம் வீரர் ப்ரித்வி ஷா 20 ரன்களிலும் அவரைத் தொடர்ந்து அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத்தொடர்ந்து கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்தது.

தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா - மயாங்க் அகர்வால்

இந்த இணை நிதானமாக ரன்கள் சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 58ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். அதன்பின் 51 ரன்களில் கோலி ஆட்டமிழக்க, பின்னர் ஸ்ரேயாஸுடன் இணைந்த ராகுல் அதிரடியாக ஆடினார்.
அரைசதம் விளாசிய விராட் கோலி

இஷ் சோதி வீசிய 35ஆவது ஓவரின்போது அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்ட ராகுல், 38ஆவது ஓவரை வீசிய சவுதி பந்திலும் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 251 ரன்களை எடுத்தது.

சதம் விளாசிய ஸ்ரேயாஸ்

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராகுல் 41 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் அதிரடி ஆட்டத்திற்கு மாறிய ஸ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ராகுல் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக ஜாதவும் அதிரடியில் கலக்க இந்திய அணி 48 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்தது. 48ஆவது ஓவரில் மட்டும் இந்திய அணி 20 ரன்களை எடுத்தது.

அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல்

49ஆவது ஓவரில் 14 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை எடுத்தது. கேஎல் ராகுல் 64 பந்துகளில் 88 ரன்களும் ஜாதவ் 15 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்திலும், ஹென்ரி நிக்கோல்ஸும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன்பிறகு கப்தில் 32 (41) ரன்களில் ஷர்த்துல் தாகூர் வீசிய 16 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

Image

அதை தொடர்ந்து இறங்கிய டாம் ப்லுண்டெல் சிறுது நேரத்தில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினாலும், அடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர், நிக்கோல்சுடன் ஜோடி சேர்ந்தார்.

Image

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக அடித்தளம் கொடுத்த நிக்கோல்ஸ்  அரைசதம் கடந்து 78 (82) ரன்களில் ஆட்டமிழந்தார்.  அப்போது நியூசி அணியின் ஸ்கோர் 28.3 ஓவரில் 171/3  ரன்களாக இருந்தது. இதையடுத்து வந்த  டாம் லேதமும், டெய்லரும்  ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் சரசரவென உயர்ந்தது.

Image

இருவரும் அரைசதம் கடந்து இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அதன்பிறகு லேதம் 69 (48) ரன்கள் (8 பவுண்டரி 2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து வந்த ஜிம்மி நீஷம் 9, கிரான்ட்ஹோம் 1 ரன்னில் நடையை கட்டினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. இருந்தாலும் ராஸ் டெய்லர் சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

Image

இறுதியில் நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்களும் (10 பவுண்டரி 4 சிக்ஸர்), மிட்சல் சான்டனர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Categories

Tech |