நியூசிலாந்தில் போராட்டக்காரர்களை கலைக்க பயங்கர சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கச் செய்த நிலையில், அதற்கு நடனமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.
நியூஸிலாந்தில் தடுப்பூசியை எதிர்க்கும் சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலைகளுக்கு இடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கூடாரங்கள் அமைத்து சுமார் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலத்த மழையிலும் விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள்.
எனவே, காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அதிகமான சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால், சற்றும் பின் வாங்காத போராட்டக்காரர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடி கொண்டாடினர்.