அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் இந்து கோவிலுக்கு முன்புறம் இருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் குயின்ஸில் இருக்கும் கோவிலின் அருகில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதில், அவர்கள், மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதி சென்றிருக்கிறார்கள்.
இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக அமெரிக்க நாட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மூன்றாம் தேதி, இதே போல் சில மர்ம நபர்கள் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் மகாத்மாவின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்திய தூதரக அதிகாரிகள் இது பற்றி தெரிவித்ததாவது, சிலையை சேதப்படுத்தியவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, தான் அந்நாட்டின் அதிகாரிகளிடம் இந்த பிரச்சனையை எடுத்து சென்றிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.