அடுத்த ஐபிஎல் போட்டியின் புதிய அணிகளை பிரபல நட்சத்திரங்கள் ஏலம் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்திய அளவில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் சமீபத்திய சீசன் UAE இல் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக CSK அணி வென்றது.
இந்நிலையில், இந்த போட்டியின் அடுத்த சீசன் 2022ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதில் புதிதாக இணைக்கப்படும் இரண்டு அணிகளுக்கான ஏலத்தில் பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், தீபிகா படுகோனே கலந்துகொள்ள உள்ளனர். ஏற்கனவே, கொல்கத்தா அணியை ஷாருக்கானும், பஞ்சாப் அணியை ப்ரீத்திஜிந்தாவும் ஏலம் எடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.