மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை அனுபமா தன்னுடைய உடம்பில் மார்புக்கு அருகில் டாட்டூ குத்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை நடிகை அனுபமா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் பிரேமம் படத்தில் நடித்த நடிகை அனுபமாவா இது என்று கூறி வருகிறார்கள். மேலும் நடிகை அனுபமா தனக்கு டாட்டூ போட்டுக் கொள்வதில் விருப்பமில்லை என்றும், தன்னுடைய உடம்பில் எங்கேயும் டாட்டூ குத்திக் கொள்ளவில்லை எனவும் இதற்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.