கேரள அரசு, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 38,684 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கேரள அரசு, பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் கேரளாவிற்கு வந்ததிலிருந்து ஒரு வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று தங்களை கண்காணித்துக் கொள்ளவேண்டும். அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொண்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிசிஆர் சோதனை செய்த பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அனைத்து பயணிகளுக்கும் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.