Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல பலவென புது சாலை…… ”5 நாட்களில் நாசமாய் போனது”….. அதிர்ச்சியில் மக்கள் …!!

புதிதாக போடப்பட்ட சாலை வெறும் 5 நாட்களில் பயனற்று போயுள்ளது செங்கல்பட்டுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தி லிருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை கடந்த சில வருடங்க ளாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.  தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த சாலை ஐந்து நாட்களில் பழுதாகி யுள்ளது. போதிய தார் இல்லாமல் வெறும் ஜல்லியை மட்டும் வைத்து சாலை அமைத்ததால் நடந்து செல்லும்  போதே ஜல்லி கற்களால் உருண்டு ஓடும்  நிலையில் சாலை உள்ளது.

இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. சாலை அமைக்கும் பணிக்காக ஒதுக்கிய பணத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த சாலையை தரமற்ற முறையில் போடுவதற்குக் காரணமானவர்கள் மீது அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி செயற்பொறி யாளரிடம் கேட்டபோது சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணியை ஆய்வு செய்தபோது தர மற்றதாக இருந்தது ஆகையால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தரமான சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Categories

Tech |