ஜெர்மனி, ஸ்பெயினில் கொரோனா அதிகம் பரவி வருவதால் அதனை ஆபத்து பகுதியாக அறிவித்திருக்கிறது.
ஜெர்மன் அரசு, Majorea, the Canary போன்ற தீவுகளையும் ஆபத்து பகுதி என்று அறிவித்திருக்கிறது. மேலும், ஜெர்மன் வரும் பயணிகள், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்தால், தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதியானது, வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஸ்பெயினில் கொரோனா பரவல் சற்று அதிகரித்திருக்கிறது.
இதற்கு, தடுப்பூசி செலுத்தாத மக்களின் வழியாக டெல்டா மாறுாபடு பரவியது தான் காரணமாக கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாட்டிற்கு கோடை காலத்திற்காக பயணிக்க வேண்டாம் என்று பிரான்ஸ் அரசு நேற்று அறிவித்திருக்கிறது.