Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமார் நடிக்கும் புதிய படம்……. வெளியான அதிரடி அறிவிப்பு…….!!!

சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”உடன் பிறப்பே” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் ‘நா நா’ போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

கத்துக்குட்டி இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார் || Sasikumars  special gift for this director

இதனையடுத்து, தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் இவர் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும், ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராஜா பட்டசர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |