Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படம்….. பாடலை வெளியிடும் கனிமொழி எம்பி…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைத்தான் பெரும்பாலும் ஆண்ட்ரியா தேர்வு செய்து நடிப்பார். அந்த வகையில் பிசாசு 2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார். இதில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய்சர் ஆனந்த் இயக்க, வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தில் 3-வது பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த 3-வது பாடலின் ப்ரோமோவை இன்று  காலை 11 மணியளவில் எம்பி கனிமொழி அவர்கள் வெளியிடுகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அனல் மேலே பனித்துளி திரைப்படம் நவம்பர் 18-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது.

Categories

Tech |