இத்தாலியில் வணிக வளாகத்திற்குள் செல்ல வேண்டுமெனில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா குறித்த சான்றிதழை காட்ட வேண்டும் என்ற புதிய விதி ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் வணிக வளாகங்களுக்குள் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் செல்ல வேண்டுமெனில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டதற்கான சான்றிதழையோ அல்லது தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவையோ காட்ட வேண்டும் என்ற புதிய விதி ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் உள்நாட்டிற்குள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது பாஸ் திட்டத்தை காண்பிக்க தேவையில்லை என்றும் இத்தாலி அறிவித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் வழங்கப்படும் கொரோனா குறித்த சான்றிதழ் பயன்பாட்டை விரிவுப்படுத்தினால் மட்டுமே இத்தாலிய நாட்டில் வணிக வளாகங்களை திறந்து வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.