சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் தற்போது விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனையை சிறை சூப்பிரண்டு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 2 மாதங்கள் வரை குறைக்கலாம். இதனால், ஆகஸ்ட்டில் அவர் விடுதலை செய்யப்படலாம். மேலும் , பொருளாதார குற்றம் புரிந்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறை துறை விதிகள் கூறுகின்றன. இது போன்ற காரணங்கள் சசிகலா விடுதலை ஆவதில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.