நபர் ஒருவர் காதலிக்காக திருமணம் செய்த பெண்ணனை கொலை செய்த நிலையில் காதலியும் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சண்டல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் நவியா ரெட்டி (22). பொறியியல் இரண்டாம் வருடம் படித்து வந்த இவருக்கு அவருடைய உறவினர் நாகசேசு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நாகசேசு தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் நவியாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் நவியா மற்றும் நாகசேசு இருவரும் அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று தெரியவந்துள்ளது.
இதனால் நாகசேசு மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால்அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்தான் நவியாவை கொலை செய்துவிட்டு காணவில்லை என்று பொய்யான புகார் கொடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் நவியாவின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், நாகசேசுவும், வினீலா என்ற பெண்ணும் திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து காதலியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் நாகசேசு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
எனவே நபியாவை கொலை செய்துவிட்டு காதலியுடன் வாழலாம் என்று திட்டமிட்டு படுகொலை செய்துள்ளார். இதற்கு அவருடைய காதலியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து நபியாவை மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து துப்பட்டாவை எடுத்து நவ்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசில் நாகசேசு சிக்கிக் கொண்டதை தெரிந்த அவருடைய காதலி வினீலாவும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து நாகசேசு மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.