ஜெர்மன் அரசு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா காரணமாக பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லாமல் பல பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனை சீர் செய்வதற்காக ஜெர்மன் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு மாணவன் கொரோனா நிதியுதவி எனும் திட்டம் மூலமாக 650 யூரோக்கள் வரை வட்டியில்லாமல் கடன் பெற முடியும்.
அதன்பின் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பெடரல் பயிற்சி உதவித் சட்டம் மூலம் வட்டி இல்லா கடனும் கிடைக்கும். ஜெர்மனி அரசு மாணவர்களின் நிதி நெருக்கடியை போக்க பல்வேறு கடன் உதவி திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், மாணவர்களுக்கு கல்வி முக்கியம் என்றாலும் தங்களது அன்றாட செலவுக்காக பகுதிநேர பணிகளிலும் ஈடுபடலாம்.
ஜெர்மனில் கல்வி தொடர்பான பணிகளை வழங்கும் அமைப்புகள் நிறைய உள்ளது. அதனை மாணவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி திட்டத்தின் மூலம் பல மில்லியன் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். ஜெர்மன் கொண்டுவந்துள்ள இந்த புதிய கடன் திட்டத்தால் மேலும் மாணவர்கள் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.