Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. சுவிட்சர்லாந்தில் சூடு பிடிக்கும் விற்பனை… எது தெரியுமா…?

சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்படும் புதிய எலக்ட்ரானிக் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த வருடம் மாற்று எரிபொருள் வாகனங்களை விற்பனை வேகமாக அதிகரித்திருக்கிறது. அந்நாட்டில் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களில் ஏறக்குறைய பாதி வாகனங்கள், மாற்று எரிபொருள் வாகனங்கள் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2021-ஆம் வருடத்தின் கடைசியில் தான் இந்த கார்களின் விற்பனை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

மாற்று எரிபொருள் கார்கள் இந்த வருடத்தில் 50% அதிக விற்பனையை பெறும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களின் வேகமான வளர்ச்சி, உலக அளவில் சீரற்று  இருக்கிறது. எனினும், சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து இருக்கிறது.

Categories

Tech |