புதியகல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள், நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட உயர்நிலை படிப்பிலும் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரபட்டுள்ளது.
இந்நிலையில் இதனை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் கருத்துகளை கேட்டு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டு அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை நாம் உணர முடிகின்றது. இன்னும் ஒரு சில மாதத்தில் புதியகல்விக்கொள்கை முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என தெரிகின்றது.