Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் புதிய மாவட்ட செயலாளர்கள்… புதிய தலைமை கழக நிர்வாகிகள்… புதிய மாவட்டம் அறிவிப்பு …!!

அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி,

அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் ,

திருமதி எஸ்.ஆர் அஞ்சுலட்சுமி ராஜேந்திரன்: கழக அமைப்புச் செயலாளர்,

சுப்புரத்தினம்: கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,

திருமதி ராஜலட்சுமி: கழக மகளிர் அணி செயலாளர்,

டாக்டர் ஆதிரா நோவிஸ் பிரபாகர்: கழக மருத்துவ அணி செயலாளர்,

திருவாலங்காடு G.பிரவீன்: கழக மாணவரணி செயலாளர்,

திருமதி இமாக்குலீன் ஷர்மிளி : கழக மகளிர் அணி இணைச் செயலாளர்,

இ.முத்துக்குமார்: கழக புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர்,

அமலன் சாம்ராஜ் பிரபாகர்: கழக எம்ஜிஆர் அணி இணை செயலாளர்,

இந்திரா ஈஷ்வர்: கழக மகளிர் அணி துணைச் செயலாளர் – என புதிய பொறுப்பு கொடுத்து, இவர்களுக்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இரண்டாவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கழக செயலாளராக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,

MR. ஆறுமுகம் என்ற கேபிள் ஆறுமுகம்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,

செஞ்சி சேவல் வி ஏழுமலை: விழுப்புரம் மாவட்ட செயலாளர்,

துரைப்பாண்டியன்: கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்,

சுந்தர்ராஜன்: கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்,

 

கோவிந்தன்: ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்,

மாரியப்பன்: ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,

வினோபாஜி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்,

செல்லப்பன்: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் என  மாவட்ட செயலாளர்கள் மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதே போல் மூன்றாவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மேற்கு – திண்டுக்கல் கிழக்கு என கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள்,  நிர்வாக வசதியை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு – திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் தெற்கு என மூன்று மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளராக கீழ்கண்டவர்கள், கீழ்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி,

 

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்: S.B பசும்பொன்,

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்: சுப்பிரமணியன்,

திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர்: வைகை பாலன் என மாவட்டச் செயலாளர்களையும் புதிதாக நியமித்துள்ளார் அடுத்தடுத்து இவளவு பொறுப்புகளை போட்டு ஓபிஎஸ் அறிவித்தது எடப்பாடி அணியை அதிர வைத்துள்ளது.

Categories

Tech |