Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிராக… தாவர தடுப்பூசி தயாரிப்பு…. அசத்திய கனடா ஆய்வாளர்கள்…!!!

கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கு எதிரான தாவர அடிப்படைக்கொண்ட தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கனடாவில் மெடிகாகோ என்னும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்கொரோனாவிற்கு எதிரான தாவர அடிப்படை உடைய தடுப்பூசியை தயாரித்திருக்கிறார்கள். தடுப்பூசியின் சிறப்பான செயல்பாட்டிற்காக, ஏஎஸ் 03 என்ற பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இத்தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனையானது சுமார், 24,141 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த தாவர தடுப்பூசியானது, ஐந்து விதமான உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ்களை எதிர்த்து 69.5% செயல் திறன் கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும், மிதமான கொரொனோ பாதிப்பை எதிர்த்து 78.8% மற்றும் கடுமையான கொரோனா பாதிப்பை எதிர்த்து 74% செயல்திறன் கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |