தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 1,834, மதுரையில் 204, செங்கல்பட்டில் 191, திருவள்ளூரில் 170, வேலூரில் 172, திருப்பத்தூரில் 18, காஞ்சிபுரத்தில் 98, ராணிப்பேட்டையில் 20, ராமநாதபுரத்தில் 140, தேனியில் 72, சேலத்தில் 89, கன்னியாகுமரியில் 53, திருவண்ணாமலையில் 55, கோவையில் 29, விழுப்புரத்தில் 40, விருதுநகரில் 28, திருச்சியில் 27, சிவகங்கையில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 24, தஞ்சையில் 22, கடலூரில் 21, கள்ளக்குறிச்சியில் 25, திண்டுக்கல்லில் 15, தென்காசியில் 12, நெல்லையில் 11, அரியலூர் மற்றும் நாகையில் தலா 10, பெரம்பலூரில் 8, திருப்பூரில் 7, திருவாரூர் மற்றும் ஈரோட்டில் தலா 5, கரூரில் 3, நீலகிரியில் 2, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் தருமபுரியில் தலா ஒருவருக்கு என இன்று 36 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 20 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத் 13, பக்ரைன் 5, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 70,977ஆக உயர்ந்துள்ளது.