Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருவள்ளூர் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 1,407, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 72, காஞ்சிபுரத்தில் 19, திருவண்ணாமலையில் 20, ராணிப்பேட்டையில் 26, தூத்துக்குடியில் 6, வேலூரில் 12, மதுரையில் 20, அரியலூர் மற்றும் கோவையில் தலா 3, கடலூரில் 19, தர்மபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, கள்ளக்குறிச்சியில் 4, கன்னியாகுமரியில் 3, நாகையில் 16, நாமக்கல்லில் 1, பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ராமநாதபுரத்தில் 10, புதுக்கோட்டையில் 2, சேலத்தில் 10, சிவகங்கையில் 7, தென்காசியில் 5, தஞ்சையில் 8, தேனியில் 3, திருப்பத்தூரில் 4, திருவாரூரில் 16, நெல்லையில் 3, திருச்சியில் 10, விழுப்புரம் 7, விருதுநகர் 2 பேர் என மொத்தம் 32 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து 5 மாவட்டங்களில் புதிதாக தொற்று இல்லை. ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று இன்று ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 11 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்றும் 1,800 ஐ தாண்டியது.

இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் வந்த 26 பேருக்கு கொரோனா உறுதியானது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |