Categories
அரசியல் மாநில செய்திகள்

நரம்புகள் படீர், படீர் என்று தெறிக்க.. தமிழ் வாழ்க… ஹிந்தி ஒழிக… என அனலில் எழுந்த கோஷம் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அண்ணா காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மதுரை முத்துவும், அவரை சார்ந்தவர்களும்…  மதுரையிலே அரசியல் சட்டத்தை கொளுத்துபவர்களை வழி அனுப்புவதற்காக சென்ற கலைஞர் அவர்களை… அதே வருடத்தில் 1964-ஆம் வருடம் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்து,  அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை கொடுத்து, சிறையில் அடைத்தார்கள்.

அதே 1964இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில்,  கீழப்பழுவுரிலே சின்னசாமி, தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவியையும்,  தனது அருமை மகள் திராவிட செல்வியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, சித்தார்த்தன் எப்படி அரண்மனையை விட்டு அர்த்த ராத்திரி வேளையிலே காட்டுக்கு போனானோ,  அதேபோல திருச்சி நோக்கி சென்றான். ஏற்கனவே 5 லிட்டர் பெட்ரோல் வாங்கி வைத்திருந்தான். அப்போது கலைஞர் சிறையில் இருக்கிறார்.

ஏற்கனவே அண்ணா அவர்கள் சிறைக்கு போயிட்டு வந்து விட்டார்கள்.  அதை கூட நான் மாநாட்டில் குறிப்பிட்டேன். அந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டு,  சுற்றிலும் யாராவது வந்து அனைத்து விடுவார்களோ என்று….  சுற்றிலும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு,  தீ வைத்துக் கொண்டு…  வராதிகேசம் பற்றி எறிய, எலும்புகள் உடைபட,  நரம்புகள் படிர் படிர் என்று தெறிக்க,  தமிழ் வாழ்க… ஹிந்தி ஒழிக என்றும் முழக்கமிட்டவாரு சின்னசாமி தன்னுடைய உயிரை பலி கொடுத்தார் என தெரிவித்தார்.

Categories

Tech |