முதலமைச்சருக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா ஊழல் பற்றி விவாதிக்க நேரம் இடம் ஒதுக்குங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ,ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக தலைவர் மீது குற்றங்களை சுமத்தி முதலமைச்சர் பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தார்.
ஆனால் நான் சில நாட்களுக்கு முன்பாகவே முதலமைச்சர் பழனிசாமி மீது பல்வேறு புகார்களை கூறியிருந்தேன். ஆனால் அதற்கு இதுவரை பதிலளிக்காத முதலமைச்சர் தொடர்ந்து திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பற்றி கேட்டால் அதற்கும் அவரிடம் பதில் இல்லை. அதிமுக தரப்பில் நேரம் இடம் ஒதுக்கினால் உங்களுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன் என்று கூறினார்.