Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் யோகா உருவாகவில்லை!”.. கே.பி. சர்மா ஒலி பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை..!!

கே.பி ஷர்மா ஒலி, யோகா இந்தியாவில் உருவாகவில்லை நேபாளத்தில் தான் தோன்றியது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகெங்கும் இந்தியா அளித்த கொடைகளில் யோகா மிக முக்கியமானது. மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத கலையாக யோகா விளங்குகிறது. வருடந்தோறும் ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக நாடுகள் முழுவதிலும் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நேற்று காத்மாண்டுவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க கே.பி சர்மா ஒலி கூறியுள்ளதாவது, யோகா இந்தியாவில் உருவாகவில்லை. யோகா கண்டறியப்பட்ட சமயத்தில் ஒரு நாடாகவே இந்தியா இல்லை. பல்வேறு ராஜ்யங்களாக பிரிந்திருந்தது. யோகா உருவானது நேபாளத்தில் தான்.

அதனை நாம் நிலைநிறுத்தவில்லை. ஆனால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கான உரிமையை கோரினார். அதன் பின்பு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார். நமது நாட்டின் யோகிகள், முனிவர்கள் தொடர்பில் நாம் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவில்லை.

ராமர், நேபாளத்தில் இருக்கும் அயோத்தியாபுரியிலும், சீதா தேவ்கட் பகுதியிலும் தான் பிறந்தனர். முனிவர் வால்மீகி பிறந்ததும் நேபாளத்தில் தான். நம் வரலாறு மாற்றப்பட்டுவிட்டது. அதனை சரியாக்கக்கூடிய நேரம் வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |