நேபாளத்தில் கனமழை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 16 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் பருவ மழையினால் கனமழை பொழிந்தது. இதனால் அங்கிருக்கும் மேலம்ஷி, இந்திராவதி போன்ற நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பக்மதி மாகாணத்தில் இருக்கும் சிந்துபல்சவுக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பலத்த மழை பெய்துள்ளது.
இதில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதில், பல பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், 16 நபர்களின் சடலங்கள் தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.