விமானம் புறப்பட்ட ஏழு நிமிடத்திற்குள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேபாள நாட்டில் சம்மிட் ஏர் விமான நிறுவனத்தினுடைய விமானம் இன்று காலை 8 மணிக்கு முஸ்டாங்கிற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 22 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதில் அந்த விமானம் புறப்பட்டு சுமார் 7 நிமிடத்திற்குள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அருகிலுள்ள பெக்ரா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மே மாதம் தாரா ஏர் பயணிகள் விமானம் செங்குத்தான மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 22 பயணிகளும் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.