நீங்கள் பார்க்கும் வேலை மீது உங்களுக்கு மிகவும் கடுப்பாக, வெறுப்பாக இருக்கிறதா.? அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
உங்களுக்கு கிடைக்கும் வேலைகளுக்கு உதவும் வகையில் சரியான வாய்ப்பை உருவாக்கி கொள்ளவது சற்று கடினமான ஒன்று தான். ஆனாலும் வழக்கமான வேலை வியப்பு பொறிகளில் சிக்காமலிருப்பது ரொம்ப முக்கியமானதாகும்.
தவறு – 1, சற்றும் சிந்திக்காமல் கால் பதிப்பது:
ஒரு சில பேர் பெரிய நிறுவனத்தை கொண்டிருக்கும் கம்பெனியில் வேலை வேண்டும், பெரிய அளவில் நிர்வாகம் இருக்கும் இடத்தில வேலை வேண்டுமென்று தெளிவில்லாமல் பிரச்சனைகள் தரக்கூடிய வேளைகளில் போய் மாட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு தெளிவு இல்லாத இலக்கு உடையவர்களின் தேடல்களும் வலுவிழந்து அவர்களின் திறமை வெளிப்படாமல் இருந்துவிடுகிற து என்று தி அன்ரிட்டர்ன் ரூல்ஸ் ஆஃப் தி ஹைலி ஃபக்டிவ் ஜாப் சர்ச் புத்தகத்தை எழுதிய ஆர்வில் பியர்சன் கூறுகிறார்.
எவ்வாறு சரி செய்யலாம்.?
உங்களிடம் பயோடேட்டா உள்ளது. இருந்தும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்கள் என்ன.? உங்களை பற்றி முதலில் நீங்களே யோசிச்சு பாருங்கள். பலமான ஆழ்ந்த சிந்தனையுடன் சிந்தியுங்கள். நீங்கள் செய்ய விரும்பும் வேலை பற்றி, உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வேலை குறித்து கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த வரையரைக்குள் வரும் நிறுவனங்களை கண்டறிந்து விண்ணப்பித்தது கொள்ளுங்கள் என்று கூறுகிறார், தில்லியைச் சேர்ந்த பணி வாழ்க்கை ஆலோசகரான ஷுபி டாண்டன்.
தவறு -2, உங்களது வலைப்பின்னலை பயன்படுத்தாதீர்கள்:
சரியான நபரை அடைய தொடர்புகளை பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் இருப்பவர் யாரையும் தெரியவில்லை என்றால் நெட்வொர்கிங் நிகழ்வுகளுக்கு சென்று கை கொடுங்கள் என்று கூறுகிறார் ஷுபி. நெட்வொர்கிங் என்பது எண்ணிக்கை விளையாட்டுஎ ஆகும். முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள ஒருவரை அடைய சராசரியாக 14 பேரை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறுகிறார் ஆர்வில்.
நீங்கள் கால் பதிக்க விரும்பும் துறையில் இருப்பவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள். தொழில்முனைவோராக நான் பல நெட்வொர்கிங் நிகழ்வுகளில் பங்கேற்கிறேன். நான் சந்திக்கும் மனிதர்களை நேர்காணல் செய்து யூடியூப்பில் போடுகிறேன். அவர்களில் பலர் எனது ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்துள்ளனர்” என்கிறார் இணைய கல்வி மேடையான யுனா அகாடமியின் சி.இ.ஓ கவுரவ் முன்ஜால்.
தவறு – 3, ஆன்லைனில் இருப்பு இல்லாமல் போவது:
ஒரு காலத்தில் வரி விளம்பரங்கள் மூலம் வேலை தேடினோம். ஆனால் அந்தக் காலம் மாறிவிட்டது. வேலைவாய்ப்பு அதிகாரிகள் உங்களைப்பற்றி கூகுள் செய்து பார்ப்பார்கள். உங்களை மோசமாக சித்தரிக்கும் ஒளிப்படங்கள் தோன்றுவது நல்லதல்ல. லிங்குடன் பக்கத்தில் கண்டிப்பாக இருத்தல் அவசியம். 200 நாடுகளில் 30 கோடிக்கும் மேல் பயனாளிகளை கொண்ட லிங்குடன் வேகமாக வளரும் சமூக வலைப்பின்னல் மேடை.
இதை எவ்வாறு சரி செய்யலாம்.?
தொடர்புகள், பரிந்துரைகளுடன் உங்கள் லின்குடன் பக்கம் புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். இலக்கணப் பிழைகள், செல்பிகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். நீங்கள் ஒரு எழுத்தாளர் என்றால் உங்களின் படைப்புகள் அத்தனையும் மற்றவர்களுக்கு தெரியும்படி பிரதிபலிப்பதற்கு வலைப்பதிவு ஒன்று உங்களுக்கு மிக தேவை.