தளபதி 65 திரைப்படத்திற்கான லொகேஷனை பார்க்க இயக்குனர் நெல்சன் ரஷ்யா சென்றுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக திகழும் விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான “மாஸ்டர்” படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் விஜயின் “தளபதி 65” திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திக்கான முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு சொல்லப்பட்டது.
அதற்கேற்றவாறு நெல்சன் படப்பிடிப்பிற்கு லொகேஷன் பார்ப்பதற்காக ரஷ்யா சென்றுள்ளார்.அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் “தளபதி 65” படத்திற்கான அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.