வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக வேண்டிய, சுவையான நெல்லி புதினா சர்பத் செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 2
புதினா – சிறிதளவு
ஊறவைத்த பாதாம் பிசின் – அரை டீஸ்பூன்
தண்ணீர் – தேவையானஅளவு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
வெல்லத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி கொள்ள வேண்டும்.பின் ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், புதினா இஞ்சி, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி அதனுடன் வெல்லத்தூள் மற்றும் பாதாம் பிசின் சேர்த்துப் பருகினால் சுவையான நெல்லி புதினா சர்பத் தயார் !!