நெல்லிக்கனியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நெல்லிக்காய் பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். தற்போது அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் கூட நெல்லிக்கனியை மக்கள் எடுத்துக் கொண்டால் அது ரத்த உற்பத்தி அதிகரிப்பதோடு எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி,
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை படிப்படியாக குறையும். சாற்றில் தேன் கலந்து குடிக்கும் போது இரத்தமானது சுத்தமாகும். நெல்லிக்காய் சாறு மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் கோடைகாலத்தில் நம் உடலில் இருக்கும் வெப்பத்தை தணிக்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கருகருவென முடி வளர்வதற்கும் நெல்லிக்காய் சாறு உகந்ததாக இருக்கிறது.