நெல் கொள்முதல் நிலையங்களை திறக்குமாறு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களில் நெல் பயிர் பயிரிட்டு அறுவடை செய்ய தயார் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் வருடம் தோறும் தமிழக அரசு சார்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் வழக்கம் போல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உத்தரவிடக்கோரி விவசாயிகள் 100-க்கும் அதிகமானோர் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர்.