Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிஜமாவே இவரு லெஜண்ட்தான் …. சுனில் நரைனை புகழ்ந்த மோர்கன்….!!!

ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சுனில் நரைனை ,கேப்டன் ஈயான் மோர்கன் புகழ்ந்துள்ளார்.

2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-வது குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறும்போது ,”ஆட்டத்தை சுனில் நரேன் மிகவும் எளிமையாக்கிவிட்டார். பவுலிங்கில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார் .

அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்த மைதானம் சற்று இருதன்மை கொண்டதாக  இருந்தாலும் இலக்கு சிறியது என்பதால் பேட்டிங்கில் நாங்கள்  சிறப்பாக செயல்பட்டோம் .அதோடு இப்போட்டியில் சுனில் நரைன் தனி ஆளாய் வெற்றியை கொடுத்துள்ளார் .நிச்சயமாக அவர் ஒரு உண்மையான டி20 லெஜன்ட் .அவர் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |