Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பேச்சுவார்த்தை தோல்வி…. மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்….. அரசுக்கு பெரும் சிக்கல்!!

பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்படி மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு தான் பாடம் எடுக்கின்றோம்.  ஆனால் ஒரூ மாதம் தாமதமாக சேர்ந்த எங்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகவும், இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி போராட்டம் நடத்துகிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்தோடு வந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் மூன்று நாட்களாக அவர்கள் உணவு ஏதும் சாப்பிடாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து போராட்டத்தை நடத்தி வரக்கூடிய சூழ்நிலைகளை தற்போது பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உடன் அவர்கள் பேச்சு வார்த்தையில் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |