Categories
மாநில செய்திகள்

NEET 2022 : வெளியான ஆன்சர் கீ… சரி பார்ப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!!!

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஆனது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 95 சதவீதம் மாணவ மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் இந்த தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. மாணவ மாணவிகள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடை குறிப்புகளுடன் ஓஎம்ஆர் விடைத்தாள் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ மாணவிகள் தங்களின் தோராயமான மதிப்பெண்ணை கணக்கிட்டுக் கொள்ளலாம். அதிகாரப்பூர்வ NEET UG இணையதளமான https://neet.nta.nic.in/என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

அந்த தளத்தில் முகப்பு பக்கத்தில் ஆன்சர் கீ ஓஎம்ஆர் விடைத்தாளில் ஸ்கேன் செய்யப்பட்ட படம் மற்றும் பதிவு செய்யப்பட்ட பதில் சவால் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் அல்லது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். தற்போது விடை குறிப்புகள் காண்பிக்கப்படும் அதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதே நேரம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் இந்த NEET மதிப்பெண் திட்டம் மற்றும் சூத்திரத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் மொத்த NEET மதிப்பெண்களை கணக்கிட்டுக் கொள்ளலாம் ஆட்சியபனைகளை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 7, 2022 வரை அவகாசம் இருக்கும். மேலும் இறுதி விடை குறிப்பு செப்டம்பர் 12,2022 ஆண்டு வெளியிடப்படும் அதனை தொடர்ந்து AP TET 2022 முடிவு செப்டம்பர் 14 அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |