மருத்துவராக வேண்டும் என்ற ஆசையோடும் லட்சியத்தோடும் நீட் தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் அதில் தோல்வியை சந்தித்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது ஆனால் மாணவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் திடீரென்று இந்த முடிவை எடுத்துக் கொள்கின்றனர். நீட் தேர்வு தோல்வியால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வு மட்டுமே மாணவர்களுக்கு முன்னால் இருக்கும் கடைசி வாய்ப்பல்ல. இந்திய அளவில் நடைபெறும் IAS, IPS, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழிசெய்யும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தமிழகம் தயார் செய்ய வேண்டும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ‘உயிரைக் காப்பதற்குத்தான் மருத்துவம் படிக்கவேண்டும், மாய்ப்பதற்கு அல்ல’ என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.