Categories
விளையாட்டு

நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருது …..! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்….!!!

இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இந்த வருடத்திற்கான தேசிய விளையாட்டு விருது  விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது .இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீரர்,வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.அதன்படி இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது .

இதையடுத்து பிரமோத் போகத் (பாரா-பேட்மிண்டன்), மிதாலி ராஜ் (இந்திய மகளிர் கிரிக்கெட்), மன்பிரீத் சிங் (ஹாக்கி) மற்றும் சுனில் சேத்ரி (கால்பந்து), ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் மற்றும் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாராலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை அவனி லெகாரா, பாரா- தடகள வீரர் சுமித் அன்டில்  தயான்சந்த் ஆகியோருக்கு  கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது.

Categories

Tech |