Categories
அரசியல்

இத மட்டும் நம்பாதீங்க…. ஆதாரம் இல்லை…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

மஞ்சள் வேப்பிலையை நம்பி அஜாக்கிரதையாக செயல்படக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருவது போல அது குறித்த வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பரவிய வதந்தி ஒன்று இந்திய மக்களில் பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அது என்னவென்றால் மஞ்சள் வேப்பிலை கலந்த கலவையை வீட்டின் முன் தெளித்தல் அல்லது தோரணம் கட்டினாலும் கொரோனா  வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற பதிவுகள் பரவி வந்தன. இது குறித்து சரியான ஆதாரம் இல்லை என சுகாதார அமைப்புகள் தெரிவித்த போதிலும், மக்கள் இதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,

வேப்பிலையும் மஞ்சளும் கிருமிநாசினி தான் ஆனால் அவற்றுக்கு கொரோனாவை விரட்டக் கூடிய சக்தி உண்டு என்பது இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை. ஆகையால் வாட்ஸ்அப் செய்திகளை நம்பி  வேப்பிலை மஞ்சள் ஆகியவற்றின் துணை இருக்கிறதே என்ற தைரியத்தில் கவனக் குறைவுடன் செயல் படவேண்டாம் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |