Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு தடை…. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளின் ஆய்வு…!!

தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, பைக்காரா படகு இல்லங்கள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா போன்றவை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி இடையே மண்சரிவு ஏற்பட்டு சாலை பெயர்ந்து விட்டது. இதனால் சுற்றுலாத்தலமான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா மலை சிகரத்தை மூடி விட்டனர்.

இதனை தொடர்ந்து பெயர்ந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது சாலை பழுதடைந்ததால் தற்காலிகமாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி செல்கின்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |