நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யா நேற்று தேனி அழைத்துச் செல்லப்பட்டு இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவமனை டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தகவல் அனுப்பினார். இதையடுத்து இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வர் எழிலரசன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் அவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி ஜகதீஷ் குமார் விசாரணை நடத்தினார்.
அப்போது கல்லூரி முதல்வரிடம் ஒரு மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேர்வதற்கு என்ன நடைமுறை பின்பற்றப் படுகின்றது.என்று பல்வேறு தகவலை CBCID டிஎஸ்பி கேட்டுள்ளார். இதனடிப்படையில் கல்லூரி டீன் கூறும் போது மும்பையில் நடைபெற்ற தகுதித் தேர்வில் தகுதி பெற்று சென்னையில் நடந்த கவுன்சிலிங்க்கில் நீட் தேர்வு எழுதிய மாணவன் பங்கேற்றுள்ளான்.
அவனுக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த ஆணையைப் பெற்றுக் கொண்டு தேர்வு எழுதிய மாணவன் கல்லூரிக்கு வந்துள்ளான் , அட்மிஷன் போட்டு உள்ளான். ஆகஸ்டு 1ஆம் தேதி கல்லூரி துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லூரிக்கு வந்த உதித் சூர்யா கல்லூரி மாணவர் விடுதியில் சேர்வதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளான். ஒப்புதல் பெறும் போது அவருடைய புகைப்படம் கேட்டதாகவும், அந்த புகைப்படம் தற்சமயம் தன்னிடம் இல்லை என்று சொல்லி 2 நாள் கழித்து தன்னுடைய புகைப்படத்தை கொடுத்து உள்ளான்.
இதையடுத்து தொடர்ந்து 45 நாட்கள் கழித்து இது தொடர்பாக தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உடனடியாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தோம். ஆனால் நீட் தேர்வு என்பதால் தங்களின் உயர் அதிகாரிகளை கேட்டு அதன் பின்னர் தகவல் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்களிடம் தெரிவித்ததாகவும் , இதனிடையே உதித் சூர்யாவின் தந்தை தனது மகனுக்கு இங்கு படிப்பதற்கு மனம் வெறுத்துப் போய் உள்ளார் என்றும், தனது மகனுக்கு படிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை என்று சொல்லி கல்லூரியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக கடிதத்தை எழுதிக் கொடுத்ததாக தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் CBCID டிஎஸ்பி_யிடம் தெரிவித்துள்ளார்.