நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் , உதித் சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாணவன் உதித் சூர்யா தலைமறைவாகி இருக்கும் சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்பதால் இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசு இந்த வழக்கை CBCID போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளது. இதனால் இது தொடர்பான அனைத்து விசாரணையையும் CBCID போலீஸார் மேற்கொள்வார்கள்.