நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து இணையதளத்தில் இருந்து முடிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடி இருப்பது தொடர்ந்து செய்தியாக வெளிவந்தது.தற்போது நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகளோடு இணையத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
தேசிய தேர்வு முகாமை நடத்தப்பட்டு நீட் தேர்வு முடிவுகளை 13 லட்சம் மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் 56 சதவீத தேர்ச்சி என நேற்று மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டத்தை அடுத்து அதில் குளறுபடி ஏற்பட்டதாக விவாதங்கள் எழுந்ததால் தற்போது நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.