Categories
மாநில செய்திகள்

கல்வி தொலைக்காட்சியில் நீட் சார்ந்த பாடங்கள் ஒளிபரப்பாகும்: தமிழக அரசு!!

தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சியில் நீட் சார்ந்த பாடங்கள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் வல்லுநர்கள் பாடமெடுக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. ஆண்டுதோறும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட பொதுத் தோ்வுகளும், போட்டித் தோ்வுகளும் கூட தற்போதைய சூழலில் நடத்த முடியாமல் உள்ளது . பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவடைந்த போதும், கரோனா அச்சத்தால் இறுதித் தோ்வை பெரும்பாலான மாணவ, மாணவியா் எழுத முடியாமல் போனது.

மேலும் 12ம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆசிரியா்கள் மேற்கொள்வா். மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு, நடப்பாண்டில் ஜூலை 26ம் தேதி நடைபெறும் என நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம், அரசுப் பள்ளியில் பணியாற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் 2 மணி நேரம் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |