Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து விருதுகளை வென்று வரும் நயன்தாராவின் ‘கூழாங்கல்’…. வெளியான புதிய தகவல்….!!!

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் அடுத்தடுத்த விருதுகளை வென்று வருகிறது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். அதன்படி தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அந்த வகையில பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் நயன்தாரா தயாரிப்பில் வெளியான கூழாங்கல் திரைப்படம் நெதர்லாந்து, நியூயார்க்கில் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது. இந்நிலையில் நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல்  திரைப்படம் உக்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |