தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
இந்த இரட்டை ஆண் குழந்தை விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில் தமிழக அரசின் அறிக்கை மூலம் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. திருமணம் முடிந்த நாளிலிருந்து கழுத்தில் மஞ்சள் கயிறோடு வலம் வந்த நயன்தாரா தற்போது தன்னுடைய மஞ்சள் கயிறை மாற்றியுள்ளார். அதற்கு பதிலாக புதிதாக தங்கத்தில் தாலி செயின் போட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.